Legal notice checking: We have land (five equal shares) in nelvoy, Kanchipuram district about one-acre agricultural land and it is ancestral property. My father S. Raman has four sons and one daughter. First sister (S.Sandhya)- she and her husband both are died and has two daughters (one daughter name V. Devi) and one son second brother (R. Pasubathi) - dead and his wife (P.lakshmi) alive and has no children third brother (R.Sekar) - he, his wife and only one daughter all die and a portion of land is sold out as undivided property by his daughter\'s husband in the year of 2012. fourth brother (R. Vasu)- he and his wife both are dead and have no children fifth son R. Kumar - my self.
Legal Notice: Ancestral Agricultural Land Issue with Undivided Property and Uncooperative Legal Heirs
Due to the undivided property sold out as mentioned above, there is difficult to sell the land because of the portion was not mentioned in sale deed usually in an undivided property sale. All others are ask me to rectify the problem and sell the land to any party once sold out the property, payment to given to all share holders by deducting the expenses what I spent for many process to sell the land. Recently one party-ready to purchase the land they ask many documents including legal heir certificates. When we asked first sister legal heirs and second brother wife they told that won\'t give the documents and not ready to pay the expenses what I did for land selling process.In last nine years about five lakhs spent for various process like cleaning the land, removing trees, advertisement, getting lot of documents from governments, showing the land to purchaser, survey the land, labour charges, police complaint, paner and poster charges, petition sent to various government offices against the undivided property sold out persons, traveling expenses are included and keep the land safe from others problems and avoid land grabbing from intruders. Due to no body ready to pay my expenses now I am planned to send the legal notice to other share holders. Please advise me \"Tamil version of legal notice follows"சட்ட அறிவிப்பு: சென்னை பல்லாவரத்தில் ஆர். குமார் மற்றும் குடும்பத்தின் உரிமைகள் மற்றும் நெல்வாயில் ஒரு ஏக்கர் விவசாய நிலம்?"
சென்னை பல்லாவரத்தில்வசிக்கும் எனது கட்சிக்காரர்கள் R.குமார் மற்றும் அவரின் மகன் மற்றும் மகள்களின் சார்பில் அனுப்பும் சட்ட அறிவிப்பு யாதெனில், மேற்கண்ட முதலாம் நபர் R. குமார் என்பவர் காலஞ்சென்ற S. ராமன் என்பவரின் இளைய மகன் ஆவார். மேலும் நெல்வாயலில் உள்ள விவசாய நிலத்தின் பிரிபடாத நிலம் 1.00 ஏக்கர் நிலத்தை விற்பதற்கு அதிகபட்ச உரிமையுள்ள தற்போது இருக்கும் ஒரே பட்டாதாரர் இவர் மட்டுமே. மற்ற பட்டாதாரர்கள் அனைவரும் தற்போது உயிருடன் இல்லை.Popular Question:"நீதிமன்ற அனுமதியின்றி 1/5 பிரிக்கப்படாத பங்கை விற்பதால் ஏற்படும் சட்டரீதியான பாதிப்புகள்: விசாரணை விவரங்கள், செலவுகள் மற்றும் நடவடிக்கைகள் தேவையா?"
உத்திரமேருரில் உள்ள விவசாய நிலத்தின் பட்டாதாரர் இல்லாதவரும் நேரடி வாரிசாக இல்லாத ஒருவருமான பிரசாந்த் என்பவர் சொத்தில் 1/5 பாகத்தை நீதிமன்றத்தின் அனுமதியில்லாமலும் தகுந்த மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாமலும் மற்ற பட்டாதாரின் அனுமதியில்லாமலும் பிரிபடாத சொத்தாக நிலத்தை மகேஷ் என்பவருக்கு 2012 ம் ஆண்டு கிரையம் செய்து சொத்துக்கு வில்லங்கம் ஏற்படுத்தியுள்ளார்.மேற்கண்ட பிரச்சினையை என் கட்சிக்காரர்தான் பல அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு முழு விவரங்களையும் பெற்று சொத்தின் மற்ற பட்டதாரர்களுக்கும் மற்றும் வாரிசுகளுக்கும் நேரிலும் மற்றும் தொலைபேசியிலும் தன் சொந்த செலவில் பல முறை தெரிவித்து இருக்கிறார். அதற்கு தாங்களும் மற்ற பட்டாதாரர்களும், மற்ற வாரிசுகளும் சேர்ந்து என் கட்சிக்காரரை நிலத்தின் ஏற்பட்டுள்ள பிரச்சினையையும், வில்லங்களையும் கையாளுமாறும், வில்லங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது காவல் துறை, மற்ற அரசாங்க அலுவலக துறை ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றம் மூலமோ எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் என் கட்சிக்காரரை முன்னின்று நடத்துமாறும் மேலும் அதற்காக ஆகும் மொத்த செலவையும் தங்களின் சார்பாக என் கட்சிக்காரரையே செலவு செய்துக் கொள்ளுமாறும் பலரின் முன்னிலையில் தாங்களும் மற்ற வாரிசு தாரர்களும் வாய் மொழி வாக்குறுதியளித்தீர்கள்.நில பரிவர்த்தனைகளை எளிதாக்க சட்ட மற்றும் நிதி தடைகளை கடப்பதில் தனிநபர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு
நிலம் விற்பதற்கு தேவையான அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளுக்கும், கால விரையத்துக்கும், உடல் உழைப்புக்கும் சன்மானமாகவும் மற்றும் செய்யும் செலவுகளுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு பிரச்சினைத் தீர்த்து நிலத்தை விற்று கொடுக்கும் போது என் கட்சிக்காரர் செய்த செலவான ருபாய் ஐந்து லட்சத்தை கழித்துக் கொண்டு மீதித் தொகையை தருமாறும் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தீர்கள். நிலத்தை விற்க பல முறை முயன்றும் அது இயலாமல் போனது.கடந்த ஒன்பது வருட போராட்டத்துக்குப் பிறகு சிலருடன் ஏற்பட்ட பலக்கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் நிலத்தை வாங்க ஒரு சிலரே முன் வந்த நிலையில் என் கட்சிக்காரரின் மகள்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஒரு பட்டாதாரர் காலஞ் சென்ற S. சந்தியா அவர்களின் ஒரு வாரிசு என்ற முறையில் V. தேவி ஆகிய தங்களை அணுகிய போது, தாங்களும் இன்னொரு பட்டாதாரர் காலஞ் சென்ற திரு. R.பசுபதி மனைவியும் ஒரே வாரிசான திருமதி. P. லட்சுமி அவர்களும் இணைந்து என் கட்சிக்காரரிடம் செய்த செலவுகளை அவ்வாறு தர இயலாது என கூறியதால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் மற்றும் சட்ட அறிவிப்பும் தங்களுக்கு அனுப்ப முடிவுச் செய்துள்ளேன்."சட்டக் கட்டுப்பாடுகளைக் கடந்து, வாங்கிய நிலத்தைப் பயன்படுத்துவதில் நிலம் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்"
நிலத்தை அத்துமீறி வாங்கியவருக்கு எந்த வகையிலும் பட்டா மாற்றம் செய்ய முடியாமலும் அவரால் நிலத்தை விற்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாமல் கடந்த ஒன்பது வருடங்களாக தடுத்து நிறுத்தியுள்ளோம். நிலத்தை வாங்குபவர்களை காரில் அழைத்துக் கொண்டு காட்டுவதும், அவர்களுக்கு ஆகும் மறற செலவுகளையும் நிலத்தின் சுத்தம் செய்வதற்கும், ஆவணங்களுக்காக பல அரசு அலுவலங்களுக்கு சென்று பல மணி காத்திருப்பதும், பல காவல் நிலையங்களில் புகாரளித்து விசாரணக்காக பல முறை பல இடங்களுக்கு சென்றதும், பல வழகளில் பண விரயம் மற்றும் நேர விரயம் ஆனதே மிச்சம்.என் கட்சிக்காரர் அடிக்கடி நிலத்தில் தானாக விளையும் ஈச்ச மரம், வேலி காத்தான் போன்ற முள் நிறைந்த மரங்களை லேலையாட்களை கொண்டும் மற்றும் JCB போன்ற இயந்திரஙகளக் கொண்டும் பெரும் செலவு செய்து மற்றும் பல நாட்கள் நேரத்தை செலவு செய்து நிலத்தை குப்பைகளின்றி சுத்தம் செய்துள்ளார். அவ்வாறு செய்தால்தான் நிலத்தை வாங்க வருபவர்கள் பார்க்க வருகிறார்கள் இல்லை எனில் \"பொறம் போக்கு\" இடம் போல தெரிகின்றது என்று சென்று விடுகின்றனர். மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் ஆட்கேட்பாரற்ற இடமாக இருப்பதால் தவறாக பயன்படுத்துவதயும் தடுத்து நிறுத்தி உள்ளோம்."நிலம் வாங்குபவர்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பணி நிலைமைகளில் உள்ள சவால்கள்"
ஒவ்வொரு .தடவையும் நிலத்தை வாங்க வருபவர்களுக்கு நிலத்தை அளந்து காட்டுவதற்கும் பணியாட்கள் தேவைப் படுவார்கள். அவ்வாறு காட்டினாலும் அங்கு உள்ள மற்றவர்கள் வாங்குவதைக் கெடுக்கின்றனர். மற்றவர்கள் நில ஆக்கிரமிப்பு செய்யாமல் இத்தனை வருடம் பாதுக்காத்து வந்துள்ளோம். மேலும் நிலத்தில் உள்ள மண்ணை தோண்டாதவாறு அந்த ஊரிலேயே ஆட்களை வைத்துப் பாதுகாத்து வந்துள்ளோம். சுற்றி சுடுகாடாக இருப்பதாலும் HT மற்றும் LT மின்சார இழைகள் மறறும் நம் நிலத்தின் வழியாக செல்வதாலும் மழைக் காலங்களில் நிலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், வடிகால் கால்வாய் நிலத்தை சுற்றி இருப்பதாலும் நம் நிலத்தைப் பார்த்து செல்பவர்கள் மீண்டும் வாங்குவதற்கான பேச்சு வார்த்தைக்கு வருவதிவல்லை.மேலும் விளம்பரம் செய்வதற்காக பணியாட்கள் கிடைப்பதும் கஷ்டமாகவே உள்ளது. அவ்வாறு கிடைத்தாலும் அதிக கூலியும் சாப்பாடு தண்ணீர் பாட்டில், குளிர் பானங்கள் வாங்குவதற்கும் ஆட்டோ, கார், பஸ் கட்டணம் போன்ற செலவுகளை செய்தால் மட்டுமே வேலை நடைப் பெறுகிறது. சென்னையிலிருந்து உத்திரமேரூர் செல்ல குறைந்தது மூன்று மணி நேரமாகிறது. மேலும் அங்கு செல்லும் போது ஒரு நாள் முழுவதும் என் கட்சிக்காரருக்கு நேரம் விரயமாகிறது. அன்றுவேறு எந்த வேலையும் செய்ய முடியாது."அரசாங்க நில சர்ச்சை: எனது கட்சி உறுப்பினரின் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல்"
ஒவ்வொரு தடவையும் உங்கள் வீட்டிற்கே வந்து தகவலையும் நடக்கும் சம்பங்களையும் தெரிவிப்பதாலும் தாங்கள் என் கட்சிக்காரர்களை தர குறைவாக நடத்துவதையும் பேசுவதையும் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. நிலம் சம்பந்தமாக சிலர் என் கட்சிக்காரர்களை மிரட்டவும் செய்கின்றனர் அதற்கு தாங்கள் தான் காரணமோ என்ற ஐயப்பாடும் என் கட்சிக் காரர்களிடையே உள்ளது. எனதுக் கட்சிக்காரர் செய்த செலவுகளை ஏற்க இயலாதவர்கள் நீங்களே அனைத்து விதமான வில்லங்களையும் உங்கள் நிலத்ததின் பங்கினை நீங்களே விலலங்கத்துடன் விற்றுக் கொள்ளவேண்டியது தானே.எனதுக் கட்சிக்காரர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களிடம் நடந்தவைகளையும், செய்ய வேண்டியதையும் தெரிவிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எனதுக் கட்சிக்காரர் உங்கள் வீட்டு வேலைக்காரர்களோ அல்லது தங்களின் அடிமைகளோ இல்லை என்பதை இந்த சட்ட அறிவிப்பின் மூலம் என் கட்சிக் காரர் சார்பாக தெரிவத்துக் கொள்கிறேன். இதன் பிறகு எனது கட்சிகாரரிடம் தாங்கள் எந்தவிதமான உதவியையும் எதிர்ப் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்."எனது கட்சி உறுப்பினர் தங்கள் நிலத்தை சந்தேகத்திற்குரிய வழிகளில் விற்றதால், நிதி இழப்பு, சட்டச் சிக்கல்கள் மற்றும் தனிப்பட்ட துயரங்கள் ஏற்படுவது பற்றிய கவலைகள். அவசர விளக்கம் தேவை."
என் கட்சிக்காரர் நிலத்தை விற்க எடுக்கும் ஒவ்வொறு முயற்சிக்கும் பல வழிகளில் முட்டுக்கட்டை போடுவதால் என் கட்சிக்காரர் செயல்பட முடியாத நிலையும் மேலும் தஙகளால் பெரும் பண விரயமும், கால விரயமும் மற்றும் மன உளச்சலுக்குள்ளாக வேண்டியுள்ளது. மேலும் தங்களை நம்பி பல இடங்களில் நான் பொறுப்பேற்று பலரிடம் மொத்த நிலத்தையும் கிரையம் செய்து தருவதாக அளித்த வாக்குறுதியை தவறியதாலும் பலரின் கோபத்திறகும் வெறுப்புக்கும் உள்ளானதால் தங்களால் என் கட்சிக்காரருக்கு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிட்டுள்ளது. இச்செலவுகளை என் கட்சிக்காரர் தங்களை நம்பி பலரிடம் ரூபாய் ஐந்து லடசத்துக்கு மேல் வட்டிக்கு கடன் பெற்றே செய்து வந்துள்ளார். தாங்கள் பலருடன் சேர்ந்து செய்த கூட்டு சதி செய்து என் கட்சிக்காரருக்கு நில விஷயத்தில் பல வகையில் இழப்பு ஏற்படுத்தி விட்டீர்கள்.Read More:
தற்போது தங்களின் மனதை இவ்வாறு மாற்றிக் கொண்டுள்ளதால் என் கட்சிக்காரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே இந்த சட்ட அறிவிப்பு கண்ட 15 தினங்களுக்குள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தாங்கள் எனது கட்சிக்காரருக்கு அதற்குண்டான அரசாங்க முத்திரைத் தாளில் கீழ்கண்டவாறு உறுதி மொழி பத்திரத்தை எழுதித் தருமாறு என் கட்சிக் காரரின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்."எனது கட்சி உறுப்பினர் 5 லட்சம் ரூபாயைக் கையாள்வது மற்றும் பிற பங்குதாரர்களின் சொத்துக்களில் அவர்கள் ஈடுபட்டது தொடர்பான உரிமைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள்?"
அதாவது என் கட்சிக்காரர் தற்போது வரை செய்துள்ள ரூபாய் ஐந்து லட்சத்தை மற்ற வாரிசுகளுடன் கலந்தாலோசித்து உடனடியாக தருவதாகவும் அல்லது அதற்கு ஈடாக மற்ற பங்குதாரர்களின் நிலத்தை அடுத்த மூன்று வருடங்களுக்கு எனது கட்சிக்காரர் பயன்படுத்திக் கொள்வார் என்றும் அச்சமயத்தில் மற்ற பங்குதாரர்கள் அவரவர்களின் பங்கினை நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ எந்த விதமான கிரையமோ, மாற்றாக்கமோ, பாராதீனமோ, உயிலோ, அடமானமோ, தானமோ போன்ற மற்ற எந்த நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று அவ்வாறு முற்பட்டால் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடுக்கவும் மற்ற சட்ட நடவடிக்கைகளுக்கும் முழு மனதுடனும் சம்மதம் தெரிவித்துக்கொள்கிறன்."நிதி இழப்பு மற்றும் கூட்டாண்மையில் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்வதன் சட்டரீதியான தாக்கங்கள்: விளக்கம் மற்றும் இழப்பீடு கோருகிறீர்களா?"
அவ்வாறு தர மறுக்கும் அல்லது மீறும் பட்சத்தில் தங்கள் மீதும் மற்ற பங்கு தாரர்களின் மீதும் தக்க அதிகார வரம்பு படைத்த நீதி மன்றத்தின் மூலம் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்றும் அதற்காக எனதுக் கட்சிக் காரருக்கு ஏற்படும் மொத்த செலவுகளை நஷ்டங்களையும் ஏற்கனவே ஏற்பட்டுள்ள இழப்புத் தொகயான ரூபாய் ஐந்து லட்சத்தை சேர்த்து வட்டியுடன் சேர்த்து மற்ற பங்குதாரர்களுடன் சேர்ந்து ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறன். அந்த பொறுப்பு தங்களையே சேரும் என இச் சட்ட அறிவிப்பின் மூலம் பங்குதாரர்களில் ஒருவரான தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.Please login or Register to submit your answer